TNEA 2025: பொறியியல் கவுன்சலிங்: சாய்ஸ் ஃபில்லிங்கில் லூப்பிங் மெத்தடு என்பது என்ன? நிபுணர் விளக்கம்
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2025: சாய்ஸ் ஃபில்லிங்கில் சிறந்த கல்லூரி மற்றும் கோர்ஸ் கிடைக்க உதவும் லூப்பிங் முறை என்பது என்ன? நிபுணர் விளக்கம்
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2025: சாய்ஸ் ஃபில்லிங்கில் சிறந்த கல்லூரி மற்றும் கோர்ஸ் கிடைக்க உதவும் லூப்பிங் முறை என்பது என்ன? நிபுணர் விளக்கம்
தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், சிறந்த கல்லூரி மற்றும் சிறந்த கோர்ஸ் கிடைக்க சாய்ஸ் ஃபில்லிங்கின் போது செய்ய வேண்டியவை என்ன? செய்யக் கூடாதவை எவை? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.39 லட்சம் அதிகமான பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, தற்போது கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், சாய்ஸ் ஃபில்லிங்கின் போது சிறந்த கல்லூரி மற்றும் கோர்ஸ் கிடைக்க உதவும் லூப்பிங் முறை என்ன என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கியுள்ளார்.
2 வகையாக லூப்பிங் மெத்தடு இருக்கிறது. முதலில் பிடித்த கோர்ஸ் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
Advertisment
Advertisements
உதாரணமாக நீங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐ.டி அல்லது இ.சி.இ படிக்க விரும்பினால், உங்களுக்கு பிடித்த டாப் கல்லூரிகளை முதலில் ஒரு குழுவாக தொகுத்து, அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த கோர்ஸ்களை முதலில் தேர்வு செய்யுங்கள். அடுத்ததாக அதே கல்லூரிகளில் உங்களுக்கு இரண்டாவது பிடித்த கோர்ஸ்களை தேர்வு செய்யுங்கள். தொடர்ந்து உங்களுக்கு மூன்றாவதாக பிடித்த கோர்ஸ்களை தேர்வு செய்யுங்கள். இப்படியாக பத்து பத்து கல்லூரிகளாக குழுவாக தொகுத்து கோர்ஸ்களை வரிசையாக தேர்வு செய்யுங்கள்.
இரண்டாவது லூப்பிங் மெத்தடு என்பது சிறந்த கல்லூரி மற்றும் கோர்ஸ் கிடைக்க உதவும். சிறந்த கல்லூரியில் ஏதேனும் ஒரு டாப் கோர்ஸ் கிடைத்தால் போதும் என நினைப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தலாம். இந்த முறையில் ஒரு கல்லூரியை தேர்வு செய்து, அதில் உங்களுக்கு பிடித்த கோர்ஸ்களை தேர்வு செய்யுங்கள். அடுத்ததாக இரண்டாவதாக ஒரு கல்லூரியை தேர்வு செய்து அதில் உங்களுக்கு பிடித்த கோர்ஸ்களை தேர்வு செய்யுங்கள். இப்படியாக உங்களுக்கு விருப்பமான, உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு கிடைக்க கூடிய கல்லூரி மற்றும் கோர்ஸ்கள் வரை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். இதுதான் சிறந்த சாய்ஸ் ஃபில்லிங் முறையாக இருந்து வருகிறது.