பொறியியல் கட் ஆஃப் அதிகரிப்பு; உங்க மதிப்பெண்களுக்கு சாய்ஸ் ஃபில்லிங் எப்படி? ஜெயபிரகாஷ் காந்தி விளக்கம்
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2025: அதிகரித்த இன்ஜினியரிங் கட் ஆஃப்; உங்கள் மதிப்பெண்ணுக்கு சாய்ஸ் லிஸ்ட் எப்படி ரெடி பண்ண வேண்டும் என கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்கம்
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2025: அதிகரித்த இன்ஜினியரிங் கட் ஆஃப்; உங்கள் மதிப்பெண்ணுக்கு சாய்ஸ் லிஸ்ட் எப்படி ரெடி பண்ண வேண்டும் என கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்கம்
தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு எப்படி சாய்ஸ் லிஸ்ட் தயார் செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இன்று (ஜூன் 27) தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு எப்படி சாய்ஸ் லிஸ்ட் தயார் செய்ய வேண்டும் என்பதை கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்ணில் 141 மாணவர்கள் உள்ளனர். 198 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 1511 மாணவர்கள் உள்ளனர். 195 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 5251 மாணவர்கள் உள்ளனர். 190 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 13958 மாணவர்கள் உள்ளனர். 185 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 24661 மாணவர்கள் உள்ளனர். 180 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 36665 மாணவர்கள் உள்ளனர். 175 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 49465 மாணவர்கள் உள்ளனர்.
170 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 63083 மாணவர்கள் உள்ளனர். 160 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 91153 மாணவர்கள் உள்ளனர். 150 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 119537 மாணவர்கள் உள்ளனர். 140 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 147260 மாணவர்கள் உள்ளனர். 120 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 196610 மாணவர்கள் உள்ளனர். 100 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 229701 மாணவர்கள் உள்ளனர்.
எனவே 198க்கு மேல் 1-1.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 195க்கு மேல் 2.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 190க்கு மேல் 4 கட் ஆஃப் அதிகரிக்கும். 185க்கு மேல் 5 கட் ஆஃப் அதிகரிக்கும். 180க்கு மேல் 6.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 175க்கு மேல் 8 கட் ஆஃப் அதிகரிக்கும். 170க்கு மேல் 9.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 160க்கு மேல் 12 கட் ஆஃப் அதிகரிக்கும். 150க்கு மேல் 15 கட் ஆஃப் அதிகரிக்கும். 140க்கு கீழ் 18 கட் ஆஃப் அதிகரிக்கும்.
இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு இந்த கட் ஆஃப் ரேஞ்சுக்கு எந்த கல்லூரி, என்ன கோர்ஸ் கிடைத்தது என்பதை தெரிந்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் சாய்ஸ் லிஸ்ட் தயார் செய்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்னதாக குறிப்பிட்ட கல்லூரியின் கட்டண விபரங்கள், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை, தன்னாட்சி அதிகாரம், என்.பி.ஏ அங்கீகாரம் மற்றும் பிற வசதிகளை தெரிந்து வைத்துக் கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்.
அடுத்து சாய்ஸ் லிஸ்ட்டை நீங்களாகவே தேர்வு செய்யுங்கள். மூன்றாம் நபர்கள் உதவியை நாட வேண்டாம்.