இன்ஜினியரிங் கட் ஆஃப் குறைய வாய்ப்பு; காரணம் இதுதான் – நிபுணர் விளக்கம்
TNEA 2025: 12 ஆம் வகுப்பு கணித தேர்வு கடினமாக இருந்ததால் பொறியியல் கட் ஆஃப் குறைய வாய்ப்பு; கணிதத்தில் எவ்வளவு மதிப்பெண் இருந்தால் டாப் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்? முழு விபரம் இங்கே
TNEA 2025: 12 ஆம் வகுப்பு கணித தேர்வு கடினமாக இருந்ததால் பொறியியல் கட் ஆஃப் குறைய வாய்ப்பு; கணிதத்தில் எவ்வளவு மதிப்பெண் இருந்தால் டாப் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்? முழு விபரம் இங்கே
12 ஆம் வகுப்பு கணித தேர்வு சற்று கடினமாக இருந்த நிலையில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கட் ஆஃப் அதிகரிக்குமா? குறையுமா? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் தொடங்கும்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 12 ஆம் வகுப்பில் கணிதம் (50%), இயற்பியல் (25%), வேதியியல் (25%) பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்கள் அடிப்பிடையிலே நடைபெறும்.
இந்த நிலையில் நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆஃப் குறையுமா அல்லது அதிகரிக்குமா என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
Advertisements
இதுதொடர்பாக விவேக் மேத்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், கணிதத் தேர்வு சற்று கடினமாக இருந்தது. எனவே கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் அடுத்து நடக்கவிருக்கும் இயற்பியல் மற்றும் வேதியியல் தேர்வுகளைப் பொறுத்த கட் ஆஃப் குறையும் அளவு மாறுபடும்.
அதேநேரம் இந்த 150 கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தாலே நல்ல கல்லூரிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே கணிதத்தில் குறைவாக மதிப்பெண் எடுப்போம் என நினைத்து, அவசரப்பட்டு மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர வேண்டாம்.
பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கான கணிதத்தில் 90க்கு மேல் எடுத்தவர்களுக்கு நல்ல கல்லூரி கிடைக்க வாய்ப்புள்ளது. இதேபோல் பி.சி மாணவர்கள் 80க்கு மேலும், எம்.பி.சி மாணவர்கள் 75க்கு மேலும், எஸ்.சி மாணவர்கள் 70க்கு மேலும், எஸ்.சி.ஏ மாணவர்கள் 68க்கு மேலும், எஸ்.டி மாணவர்கள் 67க்கு மேலும் மதிப்பெண்கள் எடுத்தால் நல்ல கல்லூரிகள் கிடைக்கும்.