/tamil-ie/media/media_files/uploads/2018/05/Engineering-online-admissions.jpg)
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு கட் ஆஃப் கூடுமா? குறையுமா? என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 12 ஆம் வகுப்பில் கணிதம் (50%), இயற்பியல் (25%), வேதியியல் (25%) பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்கள் அடிப்பிடையிலே நடைபெறும்.
இந்தநிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 அன்று வெளியிடப்பட்டது. ஒட்டுமொத்தமாக தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. இதனையடுத்து இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தநிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் கூடுமா? குறையுமா? என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கியுள்ளார்.
இந்த ஆண்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்ச்சி விகிதம் 99.73, இயற்பியல் தேர்ச்சி விகிதம் 99.22, கணிதம் தேர்ச்சி விகிதம் 99.16, உயிரியியல் தேர்ச்சி விகிதம் 99.15, வேதியியல் தேர்ச்சி விகிதம் 98.49 ஆக உள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக சென்டம் வந்துள்ளது. இயற்பியலில் 1125 பேர் சென்டம் எடுத்துள்ளனர். வேதியியலில் 3181 பேர் சென்டம் எடுத்துள்ளனர். கணிதத்தில் இந்த ஆண்டு 3022 பேர் சென்டம் எடுத்துள்ளனர்.
எனவே இந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப் நிச்சயம் உயர்கிறது. 200 கட் ஆஃப் ரேஞ்சில் 0.25 – 0.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 199 கட் ஆஃப் ரேஞ்சில் 0.5 – 1 கட் ஆஃப் அதிகரிக்கும். 198 கட் ஆஃப் ரேஞ்சில் 1 – 1.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 197 கட் ஆஃப் ரேஞ்சில் 1.5 – 2 கட் ஆஃப் அதிகரிக்கும். 195-196 கட் ஆஃப் ரேஞ்சில் 2 – 2.5 கட் ஆஃப் அதிகரிக்கும்.
190-194 கட் ஆஃப் ரேஞ்சில் 2 – 3 கட் ஆஃப் அதிகரிக்கும். 180-189 கட் ஆஃப் ரேஞ்சில் 1.5 – 2 கட் ஆஃப் அதிகரிக்கும். 160-179 கட் ஆஃப் ரேஞ்சில் 1 கட் ஆஃப் அதிகரிக்கும்.
அதேநேரம் 140-159 கட் ஆஃப் ரேஞ்சில் 0.5 கட் ஆஃப் குறையும். 120-139 கட் ஆஃப் ரேஞ்சில் 1 கட் ஆஃப் குறையும். 100-119 கட் ஆஃப் ரேஞ்சில் 0.5 கட் ஆஃப் குறையும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.