தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், காலியிடங்களின் பட்டியல் (Vacancy list) என்பது? அந்த பட்டியலின் தேவை என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.39 லட்சம் அதிகமான பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கவுன்சலிங்கின் போது கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு அவசியமான காலியிடங்களின் பட்டியல் என்ன என்பது விவேக் மேத்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் பட்டியல் என்பது கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு அவசியமான ஒன்றாகும். இந்தப் பட்டியல் சிறப்பு கலந்தாய்வுக்கு பின்னர் வெளியிடப்படும். முதல் சுற்றைப் பொறுத்தவரை அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு இடங்கள் நீங்கலாக, பிற அனைத்து இடங்களும் இருக்கும். இதனால் முதல் சுற்றில் பங்கேற்கும் மாணவர்கள் காலியிடங்களின் பட்டியலை பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டாம். ஆனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் காலியிடங்களின் பட்டியலை பார்த்து சாய்ஸ் ஃபில்லிங் செய்வது முக்கியம்.
Advertisment
Advertisements
மேலும் முதல் சுற்றில் பங்கேற்கும் மாணவர்கள் அதிக கல்லூரிகளை தேர்வு செய்துக் கொள்வது சிறந்தது. இரண்டாம் சுற்று மாணவர்கள் காலியிடங்களுக்கு ஏற்ப அதிக இடங்களை தேர்வு செய்வது நல்லது.
இந்த பட்டியல், ஒவ்வொரு சுற்று கவுன்சலிங் தொடங்கும் முதல் நாள் காலையில் வெளியிடப்படும். ஒவ்வொரு மாணவரும் தங்கள் இடஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் பொதுப் பிரிவு இடங்களை கணக்கிட்டு, அதற்கு ஏற்றாற்போல் கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்யுங்கள்.