கோவையில் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனமாக இயங்கி வரும் பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
கோவையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் கல்லூரியான பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி தமிழக அளவில் சிறந்த பொறியியல் கல்லூரியாக விளங்கி வருகிறது. அகில இந்திய அளவில் 67 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் கல்லூரியில் கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம் என்ன? இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எப்படி இருக்கும்? என்பதை இப்போது பார்ப்போம்.
இதுதொடர்பாக கல்வி ஆலோசகர் தனது யூடியூப் வீடியோவில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி, பி.எஸ்.ஜி கல்லூரியில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலமும் மேனேஜ்மெண்ட் கோட்டா மூலமும் சேர்க்கை நடைபெறுகிறது. மேனேஜ்மெண்ட் கோட்டா நுழைவுத் தேர்வு இல்லாமல் மெரிட் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இந்த மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர 180க்கும் மேல் கட் ஆஃப் இருக்க வேண்டும். 150க்கு மேல் கட் ஆஃப் இருந்தால் பேசன் டெக்னாலஜி உள்ளிட்ட சில படிப்புகளில் இடம் கிடைக்கும். மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு கல்வி கட்டணம் சுமார் ரூ.1,73,000. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 7,500 முதல் ரூ. 12,500 வரை கட்டணமாக உள்ளது. விடுதிக் கட்டணம் தனி.
கடந்த ஆண்டு பொதுப் பிரிவு கட் ஆஃப் நிலவரம்
Advertisment
Advertisements
ஆட்டோமொபைல் – 182.5
பயோடெக் – 192.5
பயோமெடிக்கல் - 190
சிவில் – 191.5
கம்ப்யூட்டர் சயின்ஸ் ஏ.ஐ.எம்.எல் – 197
கம்ப்யூட்டர் சயின்ஸ் – 198.5
சிவில் (எஸ்.எஸ்) – 187
இ.சி.இ – 198.5
இ.இ.இ – 196
இ.சி.இ (எஸ்.எஸ்) – 197
இ.சி.இ (சாண்ட்விச்) – 190
பேஷன் டெக்னாலஜி – 176.5
ஐ.டி – 197.5
ஐ.சி.இ – 191
மெக்கானிக்கல் – 193
மெக்கானிக்கல் (எஸ்.எஸ்) – 190
மெக்கானிக்கல் (சாண்ட்விச்) – 184
மெட்டலுர்ஜிக்கல் – 183.5
மெட்டலுர்ஜிக்கல் (எஸ்.எஸ்) – 181
புரோடெக்சன் – 187
புரோடெக்சன் (எஸ்.எஸ்) – 183
புரோடெக்சன் (சாண்ட்விச்) – 176.5
ரோபோட்டிக்ஸ் & ஆட்டோமேசன் – 194
டெக்ஸ்டைல் – 179.5
டெக்ஸ்டைல் (எஸ்.எஸ்) – 172.5
இதேபோல் ஒவ்வொரு பிரிவு வாரியான கட் ஆஃப் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.