TNEA 2025: வேலை வாய்ப்பு முதல் என்.ஐ.ஆர்.எஃப் ரேங்க வரை; தென் தமிழகத்தில் டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; வேலை வாய்ப்பு, கடந்த ஆண்டு கட் ஆஃப், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் தென் தமிழகத்தில் உள்ள டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; வேலை வாய்ப்பு, கடந்த ஆண்டு கட் ஆஃப், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் தென் தமிழகத்தில் உள்ள டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
New Update
college students

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், வேலை வாய்ப்பு, கட் ஆஃப், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் தென் தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிவுற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து தரவரிசை மற்றும் கவுன்சலிங் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வேலை வாய்ப்பு, கட் ஆஃப், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் தென் தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

Advertisment
Advertisements

இந்த தென் தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.

டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்

1). தியாகராஜர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், மதுரை

2). பி.எஸ்.என்.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்

3). அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி

4). மெப்கோ ஸ்லங் இன்ஜினியரிங் காலேஜ், சிவகாசி

5). நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ், தூத்துக்குடி

6). அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி

7). வேலம்மாள் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, மதுரை

8). அரசு பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர்

9). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், மதுரை

10). அரசு பொறியியல் கல்லூரி, போடி நாயக்கனூர், தேனி

Engineering Counselling Tn Engineering Admissions

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: