TNEA 2025: இ.சி.இ படிக்க ஆசையா? தமிழகத்தில் டாப் 20 இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை வேலை வாய்ப்பு, கடந்த ஆண்டு கட் ஆஃப் அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படிக்க தமிழகத்தில் உள்ள டாப் 20 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை வேலை வாய்ப்பு, கடந்த ஆண்டு கட் ஆஃப் அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படிக்க தமிழகத்தில் உள்ள டாப் 20 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இ.சி.இ எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படிக்க தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.39 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கவுன்சலிங் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், வேலை வாய்ப்பு, கட் ஆஃப், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் எலட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படிக்க தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளைப் போல், இந்த ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளை படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம் இந்தியாவில் செமி கண்டக்டர் துறையின் வளர்ந்து வரும் எழுச்சி தான். எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளை படித்தால் கோர் வேலை வாய்ப்புகள் மட்டுமல்ல, ஐ.டி துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும். அந்தவகையில் பிளேஸ்மெண்ட் மற்றும் கட் ஆஃப் அடிப்படையில் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.