பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் செயல்முறை நடைபெற்று வரும் நிலையில், தன்னாட்சி அங்கீகாரம் பெறாத கல்லூரிகளில் தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.39 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கவுன்சலிங் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தன்னாட்சி அங்கீகாரம் பெறாத கல்லூரிகளில் தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பது விவேக் மேத்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
தன்னாட்சி அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தேர்வுகள், விடைத்தாள் திருத்துதல் பணிகள் உள்ளிட்டவை பள்ளி பொதுத் தேர்வு நடைமுறை போல் நடைபெறும்.
Advertisment
Advertisements
இந்தக் கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தேர்ச்சி சதவீதத்தில் சிறப்பிடம் பெற்ற கல்லூரிகளை இப்போது பார்ப்போம்.
டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்
1). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை (தற்போது தன்னாட்சி பெற்றுள்ளது)
2). மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி
3). அருணாச்சலா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கன்னியாகுமரி
4). வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, திருவள்ளூர்
5). டானிஷ் அகமது காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்
6). அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
7). செட்டிநாடு காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கரூர்
8). ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, விருதுநகர்
9). நந்தா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு
10). அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு
11). ஆதி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, காஞ்சிபுரம்
12). இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி, சேலம்
13). நாடார் சரஸ்வதி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, தேனி
14). ஸ்ரீ ராமகிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பெரம்பலூர்
15). ஆதி பராசக்தி இன்ஜினியரிங் காலேஜ், செங்கல்பட்டு
16). கிங்ஸ்டன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், வேலூர்
17). பி.எஸ்.ஆர்.ஆர் காலேஜ் இன்ஜினியரிங், விருதுநகர்
18). தாகூர் இன்ஜினியரிங் காலேஜ், செங்கல்பட்டு
19). மைலம் இன்ஜினியரிங் காலேஜ், விழுப்புரம்
20). ஜே.ஜே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திருச்சி