TNEA 2025: டிரெண்டிங்கில் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் & டேட்டா சயின்ஸ் கோர்ஸ்; டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்பு கொட்டி கிடக்கும் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிப்பு; தமிழகத்தில் படிக்க டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்பு கொட்டி கிடக்கும் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிப்பு; தமிழகத்தில் படிக்க டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!

author-image
WebDesk
New Update
artificial intelligence

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், தற்போது டிரெண்டிங்கில் இருக்கக் கூடிய, எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்பு இருக்கக் கூடிய, ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் (Artificial Intelligence and Data Science) பாடப்பிரிவை படிக்க டாப் 30 கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பொறியியல் படிப்புக்கு அதிக விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளிலே ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Tech AI&DS) படிக்க பெரும் விருப்பம் இருந்து வருகிறது. 

இந்தநிலையில், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிப்பை படிக்க தமிழகத்தில் உள்ள டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

Advertisment
Advertisements

ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிப்புக்கு எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்புகள் உள்ளன. பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் இருப்பதால், நல்ல வேலை வாய்ப்பு சூழல் உள்ளது.

டாப் 30 கல்லூரிகள்

1). அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கேம்பஸ், சென்னை

2). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்

3). கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோவை

4). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை

5). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

6). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை 

7). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை 

8). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை

9). ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை 

10). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை 

11). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை 

12). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம் 

13). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை

14). பி.எஸ்.என்.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல் 

15). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு

16). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு 

17). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

18). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் சென்னை

19). கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை

20). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்

21). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோவை

22). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை 

23). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோவை

24). மெப்கோ ஸ்லங் இன்ஜினியரிங் காலேஜ், சிவகாசி

25). வேலம்மாள் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, மதுரை

26). செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

27). நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ், தூத்துக்குடி

28). டாக்டர் மகாலிங்கம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை

29). சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சேலம்

30). கற்பகம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை

Tn Engineering Admissions Engineering

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: