TNEA 2025: எப்போதும் மவுசு குறையாத எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்; தமிழக டாப் 30 கல்லூரிகள் இவைதான்!
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும் எலக்ட்ரிக்கல் படிப்பு; தமிழகத்தில் படிக்க டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும் எலக்ட்ரிக்கல் படிப்பு; தமிழகத்தில் படிக்க டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!
பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறந்த வேலை வாய்ப்பு இருக்கக் கூடிய எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவுகளை படிக்க டாப் 30 கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அதிகமானோர் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரம் கோர் படிப்புகளான சிவில், எலக்ட்ரிக்கல் படிப்புகளுக்கு எப்போதும் மவுசு உள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறந்த வேலை வாய்ப்பு எதிர்காலம் இருப்பதால் இந்தப் படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் கோர்ஸ் படிக்க தமிழகத்தில் உள்ள டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
எலக்ட்ரிக்கல் படித்தவர்கள், அரசு, ரயில்வே, மருத்துவம், ஏரோநாட்டிகல், தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. டாப் கம்பெனிகள் நல்ல சம்பளத்தில் வேலைக்கு தேர்வு செய்கின்றன.