/indian-express-tamil/media/media_files/KTRg5XxPMAbr8qw1XQbL.jpg)
பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்பு இருக்கக் கூடிய எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளை படிக்க டாப் 30 கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. ஒரு வாரத்திற்குள்ளாகவே விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பொறியியல் படிப்புக்கு அதிக விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரம் எதிர்காலத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில், எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளை படிக்க தமிழகத்தில் உள்ள டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் கீழ்கண்ட கோர்ஸ்கள் உள்ளன
1). எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன்
2). எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (வி.எல்.எஸ்.ஐ டிசைன்)
3). எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் (அட்வான்ஸ்டு கம்யூனிகேசன் டெக்னாலஜி)
4). எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேசன்
5). எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்
6). எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
7). எலக்ட்ரானிக்ஸ் (பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்)
இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் செய்யப்பட உள்ளன. இதனால் எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது. மேலும் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு ஐ.டி துறையிலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
டாப் 30 கல்லூரிகள்
1). அண்ணா பல்கலைக்கழக சி.இ.ஜி கேம்பஸ், சென்னை
2). அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கேம்பஸ், சென்னை
3). எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
4). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
5). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்
6). கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோவை
7). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
8). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை
9). தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
10). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
11). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
12). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
13). ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
14). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
15). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
16). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்
17). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
18). அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
19). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
20). பி.எஸ்.என்.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்
21). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு
22). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு
23). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
24). பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
25). கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
26). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்
27). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
28). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோவை
29). அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், காரைக்குடி
30). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.