/indian-express-tamil/media/media_files/KTRg5XxPMAbr8qw1XQbL.jpg)
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வரும் நிலையில், வேலை வாய்ப்பு, கட் ஆஃப், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், வேலை வாய்ப்பு, கட் ஆஃப், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்
1). அண்ணா பல்கலைக்கழக சி.இ.ஜி கேம்பஸ், சென்னை
2). அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கேம்பஸ், சென்னை
3). எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
4). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
5). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்
6). கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோவை
7). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை
8). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
9). தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
10). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
11). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
12). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
13). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
14). ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
15). ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
16). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்
17). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
18). அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
19). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
20). பி.எஸ்.என்.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்
21). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு
22). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர்
23). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
24). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
25). கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
26). பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
27). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
28). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோவை
29). அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், காரைக்குடி
30). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
31). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோவை
32). அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
33). அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு
34). அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர், கிருஷ்ணகிரி
35). மெப்கோ ஸ்லங் இன்ஜினியரிங் காலேஜ், சிவகாசி
36). வேலம்மாள் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், மதுரை
37). செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
38). நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ், தூத்துக்குடி
39). டாக்டர் மகாலிங்கம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
40). சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சேலம்
41). பிரின்ஸ் டாக்டர் கே வாசுதேவன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
42). அரசு பொறியியல் கல்லூரி, ஸ்ரீரங்கம் திருச்சி
43). கற்பகம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
44). வி.எஸ்.பி இன்ஜினியரிங் காலேஜ், கரூர்
45). ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ், திருவள்ளூர்
46). ரத்தினம் டெக்னிக்கல் கேம்பஸ், கோயம்புத்தூர்
47). டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
48). பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
49). ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
50). கே.ஜி.ஐ.எஸ்.எல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.