பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னை மண்டலத்தில் டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
இந்தநிலையில், சென்னை மண்டலத்தில் உள்ள டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
சென்னை மண்டலத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியல் பிளேஸ்மெண்ட் மற்றும் மாணவர்கள் விருப்பம் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த டாப் கல்லூரிகளில் 120 - 200 வரை கட் ஆஃப் வைத்திருப்பவர்களுக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்
1). அண்ணா பல்கலைக்கழக சி.இ.ஜி கேம்பஸ், சென்னை
2). அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கேம்பஸ், செங்கல்பட்டு
3). எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், செங்கல்பட்டு
4). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்
5). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், காஞ்சிபுரம்
6). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்
7). ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், காஞ்சிபுரம்
8). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்
9). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், காஞ்சிபுரம்
10). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், திருவள்ளூர்
11). பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
12). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
13). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
14). செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
15). பிரின்ஸ் டாக்டர் கே வாசுதேவன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
16). ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
17). பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
18). எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
19). மீனாட்சி சுந்தர்ராஜன் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
20). ஆர்.எம்.கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திருவள்ளூர்
21). செயிண்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
22). கே.சி.சி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
23). ஜே.என்.என் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங், திருவள்ளூர்
24). டானிஷ் அகமது காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
25). வேல் டெக் மல்டி டெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
26). வேலம்மாள் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
27). அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, விழுப்புரம்
28). ஜேப்பியர் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
29). ஜேப்பியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்