TNEA 2025: பொறியியல் கவுன்சலிங் ரவுண்ட் 1; சென்னையில் டாப் கல்லூரிகள் இவைதான்!
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; வேலை வாய்ப்பு, கடந்த ஆண்டு கட் ஆஃப், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் சென்னை பகுதியில் ரவுண்ட் 1 கவுன்சலிங்கிற்கு டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; வேலை வாய்ப்பு, கடந்த ஆண்டு கட் ஆஃப், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் சென்னை பகுதியில் ரவுண்ட் 1 கவுன்சலிங்கிற்கு டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்கி உள்ள நிலையில், ரவுண்ட் 1 மாணவர்களுக்கு சென்னை மண்டலத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்காக 2.39 லட்சத்திற்கும் அதிகமானோர் தகுதி பெற்றுள்ளனர். தற்போது கவுன்சலிங் செயல்முறை தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், ரவுண்ட் 1 கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சென்னை மண்டலத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை, வேலை வாய்ப்பு, கடந்த கட் ஆஃப், மாணவர்களின் விருப்பம், ஆவரேஜ் சம்பள தொகுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் மெசின் லேர்னிங், இ.சி.இ, ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ், இ.சி.இ வி.எல்.எஸ்.ஐ போன்ற டாப் கோர்ஸ்களை, கோவை பகுதியில் படிக்க விரும்புவர்கள் இந்த கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
ரவுண்ட் 1 டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்
1). அண்ணா பல்கலைக்கழக சி.இ.ஜி கேம்பஸ், சென்னை
2). அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கேம்பஸ், சென்னை
3). எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
4). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்
5). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
6). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
7). எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
8). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
9). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்
10). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
11). பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
12). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
13). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
14). ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
15). செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
16). பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
17). மீனாட்சி சுந்தர்ராஜன் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
18). வேலம்மாள் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
19). எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
20). பிரின்ஸ் டாக்டர் கே வாசுதேவன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
21). ஆர்.எம்.கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
22). கே.சி.ஜி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
23). செயிண்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
24). ஜே.என்.என் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை