TNEA 2025: இன்ஜினியரிங் கவுன்சலிங் ரவுண்ட் 1; கோவையில் டாப் கல்லூரிகள் இவைதான்!
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; வேலை வாய்ப்பு, கடந்த ஆண்டு கட் ஆஃப், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் கோவை பகுதியில் ரவுண்ட் 1 கவுன்சலிங்கிற்கு டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; வேலை வாய்ப்பு, கடந்த ஆண்டு கட் ஆஃப், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் கோவை பகுதியில் ரவுண்ட் 1 கவுன்சலிங்கிற்கு டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்கி உள்ள நிலையில், ரவுண்ட் 1 மாணவர்களுக்கு கோவை மண்டலத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்காக 2.39 லட்சத்திற்கும் அதிகமானோர் தகுதி பெற்றுள்ளனர். தற்போது கவுன்சலிங் செயல்முறை தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், ரவுண்ட் 1 கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கோவை மண்டலத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை, வேலை வாய்ப்பு, கடந்த கட் ஆஃப், மாணவர்களின் விருப்பம், ஆவரேஜ் சம்பள தொகுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் மெசின் லேர்னிங், இ.சி.இ, ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ், இ.சி.இ வி.எல்.எஸ்.ஐ போன்ற டாப் கோர்ஸ்களை, கோவை பகுதியில் படிக்க விரும்புவர்கள் இந்த கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்
1). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
2). கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோவை
3). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
4). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை
5). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
6). ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
7). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
8). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
9). கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
10). டாக்டர் மகாலிங்கம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை