பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் மாணவர்களின் விருப்பமாக உள்ள டாப் 25 கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் இன்ஜினியரிங் படிக்க ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொறியியல் படிப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு சமீபகாலமாக ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக பொறியியல் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள டாப் 25 இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
டாப் கல்லூரிகள் கடந்த ஆண்டு மாணவர்கள் தேர்வு செய்ததன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்தக் கல்லூரிகளில் படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.