TNEA 2025: பொறியியல் கவுன்சலிங்; முதல் சுற்றில் டாப் இடம் பிடித்த கல்லூரிகள் இவைதான்!
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; ரவுண்ட் 1 கவுன்சலிங் நிறைவு; கம்ப்யூட்டர் சயின்ஸ் கட் ஆஃப் அடிப்படையில் டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; ரவுண்ட் 1 கவுன்சலிங் நிறைவு; கம்ப்யூட்டர் சயின்ஸ் கட் ஆஃப் அடிப்படையில் டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கவுன்சலிங் முடிந்துள்ள நிலையில், முதல் சுற்றில் டாப் இடங்களில் வந்த இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2.39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு முதல் சுற்று கவுன்சலிங் முடிவடைந்த நிலையில், சுமார் 30000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடங்க உள்ளது.
இந்தநிலையில், முதல் சுற்றில் டாப் இடங்களில் இடம் பிடித்த இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
இதனை கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பின் கட் ஆஃப் அடிப்படையில் அஸ்வின் தரவரிசைப்படுத்தியுள்ளார்.
4). எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
5). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை
6). கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோவை
7). தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
8). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
9). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்
10). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
11). ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
12). அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
13). அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
14). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
15). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்
16). அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், காரைக்குடி
17). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
18). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
19). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
20). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
21). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
22). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
23). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு
24). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோவை
25). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
26). எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
27). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு
28). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோவை
29). அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு
30). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
31). ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
இதில் டாப் 10 கல்லூரிகளில் பெரும்பாலான கோர்ஸ்கள் முடிந்துவிட்டன. சில கோர்ஸ்களில், சில இடஒதுக்கீட்டு பிரிவுக்கு மட்டுமே இடங்கள் உள்ளன. இரண்டாம் சுற்று மாணவர்கள் அதற்கு ஏற்றாற்போல் சாய்ஸ் ஃபில்லிங் செய்யுங்கள்.