தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; ரவுண்ட் 1 கவுன்சலிங் தொடக்கம்; தமிழகத்தில் டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே; இந்த கல்லூரிகளை சாய்ஸ் ஃபில்லிங்கில் மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; ரவுண்ட் 1 கவுன்சலிங் தொடக்கம்; தமிழகத்தில் டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே; இந்த கல்லூரிகளை சாய்ஸ் ஃபில்லிங்கில் மிஸ் பண்ணிடாதீங்க!
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்கி உள்ள நிலையில், முதல் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் சாய்ஸ் ஃபில்லிங் செய்வது எப்படி? தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்காக 2.39 லட்சத்திற்கும் அதிகமானோர் தகுதி பெற்றுள்ளனர். தற்போது கவுன்சலிங் செயல்முறை தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
மாணவர்கள் சாய்ஸ் ஃபில்லிங் செய்யும் போது கவனமாக செயல்பட வேண்டும். குறைந்தபட்சம் 200க்கு குறையாமல் சாய்ஸ் ஃபில்லிங் கொடுங்கள். முதலில் கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அடுத்து கோர்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுங்கள். டாப் கல்லூரியில் எந்த கோர்ஸ் வேண்டுமானாலும் எடுத்து படியுங்கள்.
Advertisment
Advertisements
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி கோர்ஸ்களை தேர்வு செய்யுங்கள். ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ் போன்றவை சிறப்பு படிப்புகள், இவற்றை தனியாக கூட படித்துக் கொள்ளலாம். அடுத்து இ.சி.இ, இ.இ.இ, இன்ஸ்ட்ரூமெண்டேசன், கம்யூனிகேசன், கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல், மெக்கானிக்கல், மெக்ட்ரானிக்ஸ், ரோபாட்டிக்ஸ், சிவில், பயோ டெக்னாலஜி, புட் டெக்னாலஜி, பயோ கெமிக்கல், ஏ.ஐ.டி.எஸ், ஏ.ஐ.எம்.எல் போன்ற கோர்ஸ்களை தேர்வு செய்யலாம்.