TNEA 2025: இந்த கோர் இன்ஜினியரிங் படிப்புக்கு மவுசு அதிகம்; டாப் கல்லூரிகள் இவைதான்!
தமிழ்நாடு இன்ஜினியரிங் அட்மிஷன் 2025; சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும் கோர் படிப்புகளில் இதுவும் ஒன்று; தமிழகத்தில் படிக்க டாப் பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் இங்கே
தமிழ்நாடு இன்ஜினியரிங் அட்மிஷன் 2025; சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும் கோர் படிப்புகளில் இதுவும் ஒன்று; தமிழகத்தில் படிக்க டாப் பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் இங்கே
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், சிறந்த வேலை வாய்ப்பு வழங்கும் கெமிக்கல் இன்ஜினியரிங் படிக்க டாப் பொறியியல் கல்லூரிகள் எவை? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர்.
சமீப காலமாக பொறியியல் படிப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகள் மாணவர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. அதேநேரம் கோர் படிப்புகளான சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல் படிப்புகளுக்கு எப்போதும் நல்ல மவுசு உள்ளது.
Advertisment
Advertisements
இந்தநிலையில், கோர் படிப்புகளில் ஒன்றான கெமிக்கல் இன்ஜினியரிங் படிக்க தமிழகத்தில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகள் எவை என்பது குறித்து கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.