TNEA 2025: இன்ஜினியரிங் அட்மிஷன்; எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும் டாப் கோர்ஸ்கள் இவைதான்!
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2025: எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய டாப் இன்ஜினியரிங் கோர்ஸ்கள் இவைதான்; காரணங்களுடன் பட்டியலிட்ட நிபுணர்
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2025: எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய டாப் இன்ஜினியரிங் கோர்ஸ்கள் இவைதான்; காரணங்களுடன் பட்டியலிட்ட நிபுணர்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்க உள்ள நிலையில், எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடிய டாப் இன்ஜினியரிங் கோர்ஸ்கள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 12 ஆம் வகுப்பில் கணிதம் (50%), இயற்பியல் (25%), வேதியியல் (25%) பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்கள் அடிப்பிடையிலே நடைபெறும்.
இந்தநிலையில், எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடிய டாப் இன்ஜினியரிங் கோர்ஸ்கள் எவை என்பதை இப்போது பார்ப்போம். இதுதொடர்பாக கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,
கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு நல்ல மவுசு இருக்கு. அதேநேரம் மாணவர்களும் பெற்றோர்களும் மாற்று விருப்பங்களையும் பார்க்கின்றனர். 2025 அதாவது இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்பில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகு எந்த துறையில் நல்ல வேலை வாய்ப்பு இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வது அவசியம்.
Advertisment
Advertisements
அந்தவகையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வி.எல்.எஸ்.ஐ படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். இந்தியாவில் இந்த துறை நல்ல வளர்ச்சி நிலையில் இருக்கிறது. எனவே இந்தப் படிப்புகளை தேர்வு செய்யலாம்.
1). எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன்
2). எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்
3). எலக்ட்ரானிக்ஸ் வி.எல்.எஸ்.ஐ
4). எலக்ட்ரிக்கல் அண்ட் கம்ப்யூட்டர் சார்ந்த கோர்ஸ்
5). எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்ப்யூட்டர் சார்ந்த கோர்ஸ்
இதுதவிர கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி சார்ந்த படிப்புகளை தேர்வு செய்யலாம். மேலும், மெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேசன், கெமிக்கல், சிவில், பயோடெக்னாலஜி, பயோமெடிக்கல், ஃபுட் டெக்னாலஜி போன்ற படிப்புகளையும் தேர்வு செய்யலாம். ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிக்கல், ட்ரோன் டெக்னாலஜி போன்ற படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது.
அதேநேரம் டாப் கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். டாப் கல்லூரிகளில் எந்த கோர்ஸ் கிடைச்சாலும் எடுத்து படிக்கலாம்.