TNEA 2025: கம்மி கட்டணத்தில் இன்ஜினியரிங் படிக்க ஆசையா? தமிழக டாப் அரசு கல்லூரிகள் இவைதான்!
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; குறைவான கல்விக் கட்டணத்தில் சிறந்த கல்லூரியில் படிக்க விரும்புபவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ்; டாப் அரசு பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் இங்கே
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; குறைவான கல்விக் கட்டணத்தில் சிறந்த கல்லூரியில் படிக்க விரும்புபவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ்; டாப் அரசு பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் இங்கே
இன்ஜினியரிங் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் டாப் அரசு பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் இன்ஜினியரிங் படிக்க ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொறியியல் படிப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு சமீபகாலமாக ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக பொறியியல் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சில தனியார் கல்லூரிகள் பொறியியல் படிப்புகளில் புதிய கோர்ஸ்களை அறிமுகப்படுத்தினாலும், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தாலும், அதற்கு நிகரான அளவில் அரசு பொறியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. தனியார் கல்லூரிகளை விட கல்விக் கட்டணமும் அரசு பொறியியல் கல்லூரிகளில் மிகக் குறைவாக உள்ளது. சில அரசு பொறியியல் கல்லூரிகள் தனியார் கல்லூரிகளை விட அனைத்து வகையிலும் சிறந்த இடத்தில் உள்ளன. அந்த வகையில் அரசு பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்ய மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள டாப் அரசு பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.