TNEA 2025: இன்ஜினியரிங் படிக்க கம்மி பீஸ் தான்; டாப் அரசு கல்லூரிகளை நோட் பண்ணுங்க!

தமிழ்நாடு இன்ஜினியரிங் அட்மிஷன் 2025; குறைந்த கல்விக் கட்டணம், சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அரசு பொறியியல் கல்லூரிகள்; தமிழகத்தில் படிக்க டாப் கல்லூரிகள் இவைதான்!

தமிழ்நாடு இன்ஜினியரிங் அட்மிஷன் 2025; குறைந்த கல்விக் கட்டணம், சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அரசு பொறியியல் கல்லூரிகள்; தமிழகத்தில் படிக்க டாப் கல்லூரிகள் இவைதான்!

author-image
WebDesk
New Update
tamil nadu engineering admission

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகள் எவை? என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் படிக்க அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இருக்கும் நிலையில், அரசு கல்லூரிகளில் குறைவான கட்டணம் மற்றும் சிறந்த கற்பித்தல் காரணமாக அரசு கல்லூரிகளுக்கும் நல்ல மவுசு இருந்து வருகிறது.

Advertisment
Advertisements

இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகள் எவை என்பது குறித்து கல்வி ஆலோசகர் தினேஷ் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

அரசு பொறியியல் கல்லூரிகள்

1). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை 

2). அரசு பொறியியல் கல்லூரி, கருப்பூர், சேலம்

3). அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி

4). அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர், கிருஷ்ணகிரி

5). அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி

6). அரசு பொறியியல் கல்லூரி, (ஐ.ஆர்.டி.டி) ஈரோடு

7). அரசு பொறியியல் கல்லூரி, ஸ்ரீரங்கம், திருச்சி

8). தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, வேலூர்

9). அரசு பொறியியல் கல்லூரி, தருமபுரி

10). அரசு பொறியியல் கல்லூரி, செங்கிப்பட்டி, தஞ்சாவூர்

11). அரசு பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர், தேனி

இந்தக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ. 10000 முதல் ரூ. 15000 வரை மட்டுமே இருக்கிறது. மேலும் விடுதி கட்டணம் ரூ 40000 என்ற அளவில் உள்ளது. இதில் உணவுக்குக் கட்டணமும் அடங்கும்.

Tn Engineering Admissions Engineering

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: