தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ஐ.சி.டி) தொடர்பான படிப்புகள் இதுவரை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் மாணவர்களால் அதிகம் விரும்பப்படுவது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ஐ.சி.டி) தொடர்பான படிப்புகள் இதுவரை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை (டி.என்.இ.ஏ) 2020-இல் அதிகம் விரும்பப்படுகிறது.
தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ஐ.சி.டி) அல்லாத துறைகளில் வேலைவாய்ப்பின்மை நிலவுவதாலும், ஆட்டோமேஷன், டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் முக்கிய கிளை துறைகளில் விழிப்புணர்வு இல்லாதது ஆகியவை மாணவர்கள் ஐ.சி.டி படிப்புகளுக்கு வருவதற்கு காரணம் என்று பங்குதாரர்கள் கூறுகின்றனர்.
TNEA குழு செவ்வாய்க்கிழமை இரண்டாவது சுற்று கலந்தாய்வுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை வெளியிட்டது. தற்காலிக மாணவர் சேர்க்கை இடங்களுக்கான ஒதுக்கீடு தரவின் பகுப்பாய்வுப்படி, விருப்பம் தெரிவித்துள்ள மாணவர்களில் பாதி பேர் கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு அல்லது தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
பொறியியல் படிப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையைத் தொடர்ந்து, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறை மிகவும் விரும்பப்பட்ட பாடமாக உள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை ஐந்தாவது மிகவும் விருப்பமான பாடமாக மாறியுள்ளது. சிவில் இன்ஜினியரிங் படிப்புக்கு இதுவரை 831 பேரை மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஐ.சி.டி அல்லாத துறைகளுக்கான பாடத்திட்டத்தை புதுப்பிக்க பல கல்லூரிகள் தவறிவிட்டன என்று கல்வி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவு பெரும் வரவேற்பைப் பெற்றதாக தனியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஒருவர் கூறினார். எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ஐ.சி.டி அல்லாத துறைகளில் பரவலான வேலையின்மை மற்றும் குறைந்த ஊதியம் நிலவுவதே இந்த போக்குக்கு காரணம் என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"