தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்பிற்கான ஆர்வம் அதிகரித்து வருவது தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்பில் சேர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக இந்த ஆண்டு கிட்டதட்ட 66% இன்ஜினியரிங் இடங்கள் நிரம்பியுள்ளன.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளுக்கான பொதுக் கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து துணைக் கலந்தாய்வு மற்றும் எஸ்.சி.ஏ – எஸ்.சி கவுன்சலிங் நடைபெறும்.
இந்தநிலையில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் 66% இடங்கள் நிரம்பியுள்ளன. இது கடந்த ஆண்டில் 59.9% ஆக இருந்தது. இந்த ஆண்டு இன்னும் துணைக் கலந்தாய்வு இருப்பதால், சேர்க்கை விகிதம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் பொறியியல் படிப்புக்கான மவுசு மாணவர்களிடையே அதிகரித்து வருவது தெரிகிறது.
இந்தநிலையில், பொறியியல் சேர்க்கை இடங்கள் நிரம்பிய விகிதம் தொடர்பாக கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதன்படி, கடந்த ஆண்டை விட 6% இடங்கள் அதிகரித்துள்ளது எனும்போது, சுமார் 6000க்கும் மேற்பட்ட இடங்கள் இந்த ஆண்டு கூடுதலாக நிரம்பியுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ, இ.இ.இ படிப்புகளுக்கு எப்போதையும் விட ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. அதேநேரம் கோர் இன்ஜினியரிங் படிப்புகளான சிவில், மெக்கானிக்கலுக்கு ஆர்வம் குறைந்துள்ளது.
Advertisment
Advertisement
100% இடங்களையும் 16 கல்லூரிகள் நிரப்பியுள்ளன. 104 கல்லூரிகள் இந்த ஆண்டு 90%க்கு மேலான இடங்களை நிரப்பியுள்ளன. 263 கல்லூரிகள் இந்த ஆண்டு 50%க்கு மேலான இடங்களை நிரப்பியுள்ளன. அதேநேரம் 11 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“