TNEA counselling important choice filling tips: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான கவுன்சிலிங் (Engineering Counselling) தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சாய்ஸ் ஃபில்லிங் எப்படி செய்வது, தரமான கல்லூரிக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது விரும்பிய பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் அளிப்பதா? என்பது போன்ற தகவல்களை இப்போது பார்ப்போம்.
பொறியியல் கவுன்சிலிங் ஆன்லைன் முறையில் நடக்க உள்ள நிலையில், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை முன்னுரிமை அடிப்படையில் ஆன்லைனிலே நிரப்ப வேண்டும். அதில் உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்லூரிகளில் ஒதுக்கீடு கிடைக்கும்.
இதையும் படியுங்கள்: 132 பேர் 200/ 200: பொறியியல் கவுன்சலிங் ரவுண்ட் 1 போட்டி எப்படி இருக்கும்?
இந்தநிலையில், சாய்ஸ் ஃபில்லிங் எப்படி செய்வது, தரமான கல்லூரிக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது விரும்பிய பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் அளிப்பதா? போன்ற சந்தேகங்கள் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
முதலில் சாய்ஸ் ஃபில்லிங் செய்யும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது முறையே, நம்முடைய கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு கிடைக்காது கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகள், அடுத்து கிடைக்க வாய்ப்பு இருக்கும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகள், கடைசியாக நிச்சயமாக நமக்கு கிடைக்க கூடிய கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகள். இந்த அடிப்படையில் சாய்ஸ் ஃபில்லிங் செய்ய வேண்டும்.
அடுத்ததாக, தரமான கல்லூரிக்கு முக்கியவத்தும் அளிப்பதா? அல்லது விரும்பிய பாடப்பிரிவுக்கு முன்னுரிமை அளிப்பதா? என்பது மாணவர்களிடையே உள்ள பெரும் குழப்பம். பெரும்பாலானவர்களின் எண்ணம் தரமான கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்க வேண்டும் என்பது தான். ஆனால் உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில், இதில் நினைத்தது நடக்காமல் போகலாம். எனவே நீங்கள் கல்லூரி முக்கியமா? பாடப்பிரிவு முக்கியமா என்பதை முதலில் முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு டாப் கல்லூரி தான் முக்கியம் என்றால், அந்த கல்லூரியில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் முன்னுரிமை அளியுங்கள். இல்லை, உங்களுக்கு பாடப்பிரிவு தான் முக்கியம் என்றால், உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு கிடைக்ககூடிய கல்லூரிகளில், அந்த பாடப்பிரிவுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
அடுத்ததாக நீங்கள் முடிவு செய்ய வேண்டியது, இடம். அதாவது பெரும்பாலான மாணவர்களின் விருப்பம் சென்னை அல்லது கோவை. ஆனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தரமான கல்லூரிகள் உள்ளன. எனவே அதற்கேற்றாற்போல், எந்தப் பகுதியில் உங்களுக்கு படிக்க விருப்பம், அல்லது சொந்த மாவட்டத்திற்குள்ளே படிக்க விருப்பமா? என்பதை முடிவு செய்து அதற்கேற்ப கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்.
பெரும்பாலான மாணவர்கள் பாடப்பிரிவுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் (Computer Science) படிப்பை அதிகமானோர் விரும்புகிறார்கள். ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கான இடங்கள் குறைவாக உள்ள நிலையில், எல்லோருக்கும் அந்த பாடப்பிரிவு கிடைப்பது சாத்தியமற்றது.
எனவே, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க நினைப்பவர்கள், அது சார்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் பிஸினஸ் சிஸ்டம், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் மெஷின் லேர்னிங், இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் படிப்புகளை தேர்வு செய்யலாம். கடந்த ஆண்டுகளில் இந்த படிப்புகளுக்கு போதிய வரவேற்பு இல்லாத நிலையில், இந்த ஆண்டில் போட்டி இருக்கிறது. அதற்கேற்ப இந்த படிப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
அடுத்ததாக முடிந்தவரை 100க்கும் மேற்பட்ட முன்னுரிமைகளை கொடுங்கள். உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், அதிகமாக சாய்ஸ் கொடுங்கள். ஒருவேளை நீங்கள் குறைவாக கொடுக்கும்போது, உங்களுக்கு இடம் கிடைக்காமல் போகும் ஆபத்தும் உள்ளது. எனவே ஆபத்தைக் குறைக்கும் வகையில் அதிக சாய்ஸ்களை கொடுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.