தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் மே இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், எந்த பாடப்பிரிவுக்கு எந்த கல்லூரி சிறந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் செயல்முறை தொடங்கும். இந்தநிலையில், எந்தப் பாடப்பிரிவுக்கு எந்தக் கல்லூரி சிறந்தது? மாணவர்கள் எந்தப் பாடப்பிரிவை எந்தக் கல்லூரியில் படிக்க விரும்புகிறார்கள் என்ற பட்டியலை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கேம்பஸ் தலைசிறந்த கல்லூரியாக உள்ளது. அடுத்து மாணவர்கள் அதிகம் விரும்பும் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் படிப்பிலும் எம்.ஐ.டி கல்லூரியே அதிகம் விரும்பப்படுகிறது.
சிவில் மற்றும் சிவில் தமிழ் மீடியம் படிக்க மாணவர்கள் அதிகம் விரும்புபவது கிண்டி பொறியியல் கல்லூரியைத் தான். கோர் படிப்புகளான இ.சி.இ, எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெக்கானிக்கல் தமிழ் மீடியம் போன்ற படிப்புகளுக்கு சி.இ.ஜி கல்லூரி அதிகம் விரும்பப்படுகிறது.
அதேபோல், மாணவர்கள் முதன்மைத் தேர்வாக இருக்கக் கூடிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவிலும் சி.இ.ஜி தான் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த பிற படிப்புகளில் கோயம்புத்தூர் பகுதிகளில் உள்ள ஸ்ரீஈஸ்வர், ஸ்ரீகிருஷ்ணா, பி.எஸ்.ஜி ஆகிய கல்லூரிகள் முன்னிலையில் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“