Advertisment

ஐ.ஏ.எஸ்-க்கு இணையான ஐ.இ.எஸ் தேர்வு: இந்த 4 என்ஜினீயரிங் குரூப் மாணவர்கள் மட்டும்தான் எழுதவே முடியும்!

பொறியியல் படிக்க போறீங்களா? ஐ.இ.எஸ் தேர்வு பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்; 4 கோர்ஸ் படித்தவர்கள் மட்டுமே எழுத முடியும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News

engineering Student

தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஐ.இ.எஸ் தேர்வு பற்றியும், அதற்கு என்ன பிரான்ச் படிக்க வேண்டும் என்பது பற்றியும் இப்போது பார்ப்போம்.

Advertisment

அகில இந்திய குடிமை பணிகள் போலவே, அகில இந்திய பொறியியல் பணிகள் உள்ளன. அதாவது ஐ.ஏ.எஸ் போல் ஐ.இ.எஸ் பணிகள் உண்டு. IES – Indian Engineering Services. ஐ.இ.எஸ் என்பது நாட்டின் உயரிய பொறியியல் சார்ந்த பணியாகும். இதற்கான தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வுகளைப் போன்றே கடினமானது. இந்த தேர்வை யூ.பி.எஸ்.சி தான் நடத்துகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்வை என்ஜினீயரிங் படிப்புகளில் நூற்றுக்கு மேலான பாடப்பிரிவுகள் இருந்தாலும், 4 பாடப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எழுத முடியும்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் என்ஜினீயரிங் அட்மிஷன்: எந்தெந்த கோர்ஸ்களில் நிறைய காலியிடங்கள்? இதை நோட் பண்ணுங்க மாணவர்களே!

இந்தநிலையில், ஐ.இ.எஸ் தேர்வு மற்றும் அதற்கான பொறியியல் பாடப்பிரிவுகள் குறித்து கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். கம்ப்யூட்டர் சயின்ஸ் எதிர்காலத்திற்கு தேவையான படிப்பு தான். ஆனால் இத்தனை பேர் படிக்க வேண்டுமா என்பது தான் கேள்விக்குறி. எலன் மஸ்க் உள்ளிட்ட பெரு நிறுவன தலைவர்கள் உங்கள் துறையில் ஆட்டோமேஷன் சார்ந்து படியுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள். இதேநிலை நீடித்தால், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பவர்கள், ஆட்டோமேஷன், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பாடங்களை படிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

என்ஜினீயரிங் படித்தவர்கள் மட்டுமே எழுதக்கூடிய ஐ.இ.எஸ் தேர்வு உள்ளது. இதற்கான தேர்வை யூ.பி.எஸ்.சி தான் நடத்துகிறது. இந்தியாவிலே என்ஜினீயர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் பதவி இது தான். இதற்கு கீழ்கண்ட 4 பொறியியல் பாடப்பிரிவை படித்தவர்கள் மட்டுமே தகுதி பெறுவர்.

  1. சிவில் என்ஜினீயரிங்
  2. மெக்கானிக்கல் என்ஜினீயரிங்
  3. எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்
  4. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் என்ஜினீயரிங்

இது தவிர பிற பாடப்பிரிவை படித்தவர்கள் எழுத முடியாது. குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் எழுத முடியாது. கோர் டிபார்ட்மெண்ட்களில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. எனவே நல்ல கல்லூரிகளில் இதுபோன்ற கோர் படிப்புகளை தேர்வு செய்யுங்கள்.

ஐ.இ.எஸ் தேர்வு செயல்முறை

முதல் நிலை தேர்வு – 500 மதிப்பெண்கள்

முதன்மை தேர்வு – 600 மதிப்பெண்கள்

நேர்முகத் தேர்வு – 200 மதிப்பெண்கள்

முதல்நிலைத் தேர்வில் ஜெனரல் ஸ்டெடிஸ் என்ஜினீயரிங் ஆப்டிடியூட் மற்றும் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் இருந்து வினாக்கள் இடம்பெறும். முதன்மைத் தேர்வில் பொறியியல் படிப்புகளில் இருந்து விரிவான விடையளிக்கும் வகையில் வினாக்கள் இடம்பெறும்.

ஐ.இ.எஸ் தேர்வில் தேர்வாகுபவர்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகள் வழங்கப்படும். எனவே மாணவர்கள் கோர் படிப்புகளுக்கு கவனம் கொடுங்கள்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜூம் கம்ப்யூட்டர் சயின்ஸ் தவிர கோர் படிப்புகளில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார். மேலும் நல்ல கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering Upsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment