தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் நடைபெற்று வரும் நிலையில், சாய்ஸ் ஃபில்லிங் அவகாசம் முடிகிற நேரத்தில் இந்த விஷயத்தை அவசியம் செய்ய வேண்டும் என கல்வியாளர் கூறுகிறார்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்து, தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: TNEA: பொறியியல் கவுன்சலிங் ரவுண்ட் 2 மாணவர்களே; இந்த டாப் கல்லூரிகளில் இன்னும் இடங்கள் இருக்கு!
இந்தநிலையில், சாய்ஸ் ஃபில்லிங் செய்யும் போது மாணவர்கள் கண்டிப்பாக இதை செக் பண்ணுங்க என கல்வியாளர் சுரேஷ் சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது யூடியூப் வீடியோவில், எந்த ரவுண்ட் கவுன்சிலிங்கில் கலந்துக் கொண்டாலும், சாய்ஸ் ஃபில்லிங்கிற்கான கால அவகாசம் முடிவடைகின்ற நேரத்தில், நீங்கள் கொடுத்துள்ள சாய்ஸ்கள் சரியாக இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். 5 மணிக்கு கால அவகாசம் முடிய உள்ள நிலையில், நீங்கள் 4.50 மணிக்கு ஒருமுறை உங்கள் சாய்ஸ்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
கவுன்சலிங் சாஃப்ட்வேரில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் நீங்கள் ஏதேனும் கல்லூரி அல்லது மூன்றாம் நபரிடம் உங்கள் பயனர் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டைக் கொடுத்திருந்தால், அவர்கள் நீங்கள் சாய்ஸ் ஃபில்லிங் செய்ததற்கு பிறகு மாற்றலாம். எனவே கடைசி நேரத்தில் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக, இரண்டாவது மற்றும் அதற்கு பிறகான சுற்றுகளில் கலந்துக் கொள்பவர்கள் கண்டிப்பாக அதிகமான சாய்ஸ்கள் கொடுங்கள். குறைவாக கொடுத்தால் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.
அடுத்ததாக கோர் பிரான்ச்களான மெக்கானிக்கல், சிவில் போன்றவற்றை மாணவர்கள் விரும்பவில்லை. இந்த படிப்புகளில் டாப் கல்லூரிகளே இன்னும் இடங்கள் உள்ளன. ஆனால் இந்தப் படிப்புகளை தேர்வு செய்வது சிறந்தது. எனவே இ.சி.இ, இ.இ.இ, இ&ஐ போன்ற படிப்புகளை தேர்வு செய்யுங்கள். அடுத்ததாக டாப் கல்லூரிகளில் என்ன பாடப்பிரிவு இருந்தாலும் தேர்வு செய்யுங்கள்.
நீங்கள் எந்த பிரான்ச்சை தேர்வு செய்தாலும் ஐ.டி நிறுவனங்களில் வேலைக்குச் செல்லலாம். அதற்கு நீங்கள் நல்ல கல்லூரியில், நன்றாக படித்து, கூடுதலாக தேவையான திறன்களை வளர்த்துக் கொண்டால் நிச்சயம் ஐ.டி கம்பெனிகளில் வேலை செய்யலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு மட்டும் தான் சரியானது என நினைக்க வேண்டாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.