TNEA Counselling: என்ஜினீயரிங் கவுன்சலிங் ரவுண்ட் 1; மாணவர்கள் தேர்வு செய்த டாப் 5 கோர்ஸ்கள் இவை!
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; முதல் சுற்றில் மாணவர்கள் அதிகம் தேர்வு செய்த பிரான்ச்கள் எவை? எந்த என்ஜீனியரிங் படிப்புகளுக்கு மாணவர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்?
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; முதல் சுற்றில் மாணவர்கள் அதிகம் தேர்வு செய்த பிரான்ச்கள் எவை? எந்த என்ஜீனியரிங் படிப்புகளுக்கு மாணவர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்?
தமிழ்நாடு பொறியியல் கவுன்சிலிங்கின் முதல் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், மாணவர்களின் விருப்பமாக உள்ள டாப் 5 கோர்ஸ்கள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கவுன்சிலிங் செயல்முறை தொடங்கியுள்ளது. முதல் சுற்று கவுன்சிலிங் முடிவடைந்து, தற்போது தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒதுக்கீட்டை உறுதி செய்து வருகின்றனர். இந்தநிலையில், மாணவர்கள் அதிகம் தேர்வு செய்துள்ள டாப் 5 கோர்ஸ்கள் எவை என்பது குறித்து கல்வியாளர் அஸ்வின் பகுப்பாய்வு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், முதல் சுற்றுக்கு 23835 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் 19025 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இதில், மொத்தம் உள்ள 100 பாடப்பிரிவுகளில், டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி, பெட்ரோலியம் என்ஜீனியரிங், மரைன் என்ஜீனியரிங், மெக்கானிக்கல் அண்ட் மெக்ட்ரானிக்ஸ் என்ஜீனியரிங், மெக்ட்ரானிக்ஸ், என்விரான்மெண்டால் என்ஜீனியரிங், பயோ டெக்னாலஜி அண்ட் பயோ கெமிக்கல் என்ஜீனியரிங் ஆகிய படிப்புகளை மாணவர்கள் முதல் சுற்றில் தேர்வு செய்யவில்லை.
டாப் 5 கோர்ஸ்கள்
எண்
பாடப்பிரிவு
நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை
மொத்தம் உள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை
1
Computer Science and Engineering
4712
433
2
Electronics and Communication Engineering
2848
418
3
Information Technology
1883
258
4
Artificial Intelligence and Data Science
1799
287
5
Electrical and Electronics Engineering
1206
378
குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகள் மாணவர்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. மொத்தம் நிரம்பிய 19025 இடங்களில் 10795 இடங்கள் கணினி சார்ந்த படிப்புகளிலே நிரம்பியுள்ளன. சிவில், மெக்கானிக்கல் படிப்புகளுக்கு எப்போதும் இருக்கும் வரவேற்பு உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil