TNEA Engineering counselling choice filling tips for secondary courses: தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங் தொடங்கியுள்ள நிலையில், டாப் கல்லூரிகளில் முதன்மை கோர்ஸ் கிடைக்க வாய்ப்பு இல்லாதவர்கள், செகண்டரி கோர்ஸ் எடுத்து படிப்பது நல்லதா? அவற்றை தேர்வு செய்யலாமா என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்கியுள்ளது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ரவுண்ட் கவுன்சலிங்கில் 14,524 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள டாப் கல்லூரிகளில் இடம் பிடிக்க இவர்களிடையே கடும் போட்டி இருக்கும்.
இந்தநிலையில், 190 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் வைத்திருக்கும் பெரும்பாலான மாணவர்களின் முக்கிய கேள்வி, டாப் கல்லூரிகளில் டாப் கோர்ஸ்களான கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, இ.சி.இ, சிவில், மெக்கானிக்கல் போன்ற படிப்புகள் கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலையில், பிரிண்டிங், செராமிக், பெட்ரோலியம், ரப்பர் & பிளாஸ்டிக், மெட்டீரியல் சயின்ஸ், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், அக்ரிகல்ச்சர், பார்மா, ஆட்டோமொபைல், ஏரோநாட்டிகல், இண்டஸ்ட்ரியல், மேனுபாக்சரிங் போன்ற செகண்டரி கோர்ஸ் எடுத்து படிக்கலாமா என்பது தான். இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அது குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
Advertisements
இதுபோன்ற செகண்டரி படிப்புகளை தங்களது சாய்ஸ் ஃபில்லிங்கில் கொடுக்க நினைப்பவர்கள், ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொடுங்கள். உங்களுக்கு இந்த செகண்டரி கோர்ஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டால், நீங்கள் படிக்க தயாராக உள்ளீர்களா என்பதை யோசித்து முடிவெடுங்கள்.
மேலும், அந்தப் படிப்புகளின் வேலைவாய்ப்புகள் எப்படி? என்ன சம்பளம் கிடைக்கும்? கேரியர் வளர்ச்சி எப்படி இருக்கும்? என்பதை எல்லாம் ஆராய்ந்து பின் முடிவெடுங்கள். இந்தப் படிப்புகளில் வேலைவாய்ப்புகள் குறைவான அளவாகவே உள்ளது, மேலும் சம்பளமும் குறைவாகவே உள்ளது, எனவே விருப்பமிருந்தால் மட்டும் தேர்ந்தெடுங்கள்.
மேலும், சில செகண்டரி கோர்ஸ் படிக்கும்போது கேட் தேர்வு எழுத வாய்ப்பு இருந்தாலும், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு நேரடியாக இடம்பெறாது, இணைப் பாடப்பிரிவுடன் சேர்ந்து இடம்பெறும், இதனையும் கவனத்தில் கொண்டு செகண்டரி கோர்ஸ்களை தேர்வு செய்யுங்கள். இவ்வாறு ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.