பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களின் முதல் விருப்பமாக இருப்பது கணினி அறிவியல் என்ஜினியரிங் (Computer Science Engineering) தான். அதேநேரம் தற்போது கம்ப்யூட்டர் சார்ந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science) போன்ற பிரிவுகளுக்கும் அதிக மவுசு உள்ளது. இந்தநிலையில் இவற்றில் எந்தப் படிப்பை படிக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
தற்போது ஐ.டி (IT) துறையில் நல்ல வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் இருந்து வருவதால், மாணவர்கள் பொறியியல் சி.எஸ்.இ (CSE) மற்றும் ஐ.டி (IT) படிப்புகளை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும், கம்ப்யூட்டர் சார்ந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science) போன்ற படிப்புகளையும் மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் தேர்வு செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: பொறியியல் படிக்க விருப்பமா? எம்.ஐ.டி கல்லூரியில் சேர இந்த கட் ஆஃப் போதும்!
இந்தநிலையில் எந்த படிப்பை தேர்வு செய்யலாம் என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
அந்த வீடியோவில், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் என்பது ஒரு கருவி. டெல்லி, சென்னை, மும்பை போன்ற ஐ.ஐ.டி.,களும், சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியும் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் பிரிவில் பட்டப்படிப்புகளை வழங்கவில்லை. ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பு தான். ஆனால் அதைவிட கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இ.சி.இ-க்கு முக்கியத்துவம் அளிப்பது சிறந்தது.
ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் படிப்புகளை கூடுதலாக படித்துக் கொள்வது எதிர்கால வளர்ச்சிக்கு பயனளிக்கும். நீங்கள் எந்த இன்ஜினியரிங் பிரிவை படித்தாலும், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் படிப்பை கூடுதலாக படித்து, உங்கள் பிரிவில் எப்படி பயன்படுத்தலாம் என்று கற்றுக் கொள்ளுங்கள். வேலை வழங்கும் நிறுவனங்கள் லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை பொறியியல் பட்டதாரி தெரிந்து வைத்திருக்கிறாரா? ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் உடன் இணைத்து சிறந்த முடிவுகளை கொடுக்க முடிந்தவரா என்று எதிர்ப்பார்க்கின்றன. ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் கற்றுக் கொண்டு சின்ன புராஜெட் செய்யுங்கள். எனவே பாடப்பிரிவை தேர்வு செய்யும் முன் அலசி ஆராயுங்கள். நல்ல கல்லூரியை தேர்வு செய்யுங்கள். எந்தக் காரணம் கொண்டும் நல்ல கல்லூரிகளை தவறவிட்டு விடாதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.