தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் 12 ஆம் பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் முதல் 2 வாரங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான பொறியியல் கட் ஆஃப் குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி கடந்த ஆண்டைப் போலவே இயற்பியல் மற்றும் வேதியியல் தாள் கேட்கபட்டன. ஆனால் கணிதம் கடந்த ஆண்டு கடினமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஈஸியாக இருந்தது. இதனால் கட் ஆஃப் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு 195க்கு மேல் 0.5 கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம் 190க்கு மேல் 1.5 கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 185க்கு மேல் 2.5 கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 180க்கு மேல் 4 கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 170க்கு மேல் 7 கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 160க்கு மேல் 9 கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 150க்கு மேல் 11 கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“