தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வின் (TNEA) முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், மாணவர்கள் அதிக முன்னுரிமை கொடுத்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
பொறியியல் கவுன்சலிங்கின் முதல் சுற்று கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. 12 ஆம் தேதி வரை சாய்ஸ் ஃபில்லிங்க்கு அவகாசம் வழங்கப்பட்டது. 13 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்தநிலையில் இன்று முதல் சுற்றின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.
இதையும் படியுங்கள்: TNEA Counselling Round 1: மாணவர்கள் தேர்வு செய்த டாப் 20 பொறியியல் கல்லூரிகள் இவைதான்!
இதனிடையே முதல் சுற்று கலந்தாய்வு குறித்த பகுப்பாய்வை கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்கள் அதிக முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் எவை என்பதனை இப்போது பார்ப்போம்.
முதல் சுற்று கலந்தாய்வு நிலவரங்களை பார்க்கும்போது, மாணவர்கள் நல்ல பிராண்ட் மதிப்பு, வேலைவாய்ப்புகள், வசதிகள் மற்றும் பல சிறப்புகளைப் பெற்ற கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.
அதேநேரம், NIRF தரவரிசை செயல்முறையில் இல்லாத சில கல்லூரிகள் அல்லது மிகவும் குறைவான தரவரிசையில் உள்ள கல்லூரிகள், உயர் தரவரிசையில் உள்ள சில கல்லூரிகளை விட சிறப்பாக செயல்பட்டு இருப்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக உள்ளது.
மிகவும் ஆச்சரியம் என்னவென்றால், அரசு பொறியியல் கல்லூரிகள், பல்வேறு இடங்களில் உள்ள பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவை டாப்பர்களால் அதிகம் விரும்பப்படவில்லை.
மேலும், மத்திய பிளாஸ்டிக் நிறுவனம் மற்றும் மத்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனமும் டாப்பர்களால் விரும்பப்படவில்லை. ஆனால் மத்திய எலக்ட்ரோ இரசாயன நிறுவனம் (CECRI) மிகவும் விருப்பமான தேர்வாக இருந்தது.
மிகவும் விருப்பமான அரசு / அரசு உதவி பெறும் / மத்திய நிறுவனக் கல்லூரிகள்
1. CEG வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.
2. எம்.ஐ.டி வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.
3. CECRI – காரைக்குடி
4. தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
5. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
6. PSG காலேஜ் ஆஃப் டெக்னாலஜி – கோயம்புத்தூர்
7. கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி
8. ஏ.சி டெக் வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
9. சேலம் அரசுப் பொறியியல் கல்லூரி
10. அழகப்பா செட்டியார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, காரைக்குடி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil