TNEA Engineering counselling second round competition details: தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ரவுண்ட் கவுன்சலிங்கில் டாப் மோஸ்ட் கல்லூரிகள் பெரும்பாலும் நிரம்பிவிடும் நிலையில், அடுத்த கட்டத்தில் இருக்கும் கல்லூரிகளை பிடிக்க இரண்டாம் கட்ட கலந்தாய்வு மாணவர்களிடையே கடும் போட்டி இருக்கும். இந்த நிலையில், இரண்டாவது ரவுண்ட் கவுன்சலிங் எவ்வளவு போட்டி நிறைந்ததாக இருக்கும்? சாய்ஸ் ஃபில்லிங்கில் என்ன செய்ய வேண்டும்? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
இரண்டாவது ரவுண்ட் கவுன்சலிங்கில் கட் ஆஃப் மதிப்பெண் 163 முதல் 184.50 வரை உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள். இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு இரண்டாவது ரவுண்டில் 14,525 ரேங்க் முதல் 45577 ரேங்க் வரை உள்ள மாணவர்கள் அழைக்கப்பட உள்ளனர்.
இந்தநிலையில், பொறியியல் கவுன்சலிங்கின் இரண்டாவது ரவுண்டில் போட்டி எப்படி இருக்கும் என கல்வியாளர் ரமேஷ் பிரபா தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அது குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.
சென்ற வருடத்தைப்போலவே இந்த வருடமும், ஒரே கட் ஆஃப் மதிப்பெண்ணில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். இதனால் போட்டி கடுமையானதாக இருக்கும். மாணவர்களுக்கு சாய்ஸ் ஃபில்லிங் செய்வதும் கடினமாக இருக்கும்.
எனவே, நமக்கு விருப்பமான கல்லூரியில் விருப்பமான பாடப்பிரிவை ஒதுக்கீடு பெற, முதலில் நம்முடைய கட் ஆஃப் மதிப்பெண்ணில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு கட் ஆஃப் மதிப்பெண்ணிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
கட் ஆஃப் மதிப்பெண்
மாணவர்களின் எண்ணிக்கை
184.5
521
184
523
183.5
542
183
562
182.5
521
182
553
181.5
503
181
563
180.5
522
180
564
179.5
559
179
611
178.5
542
178
632
177.5
613
177
615
176.5
617
176
633
175.5
571
175
567
174.5
639
174
614
173.5
620
173
634
172.5
595
172
634
171.5
639
171
619
170.5
592
170
614
169.5
650
169
664
168.5
619
168
621
167.5
656
167
684
166.5
658
166
665
165.5
645
165
642
164.5
661
164
641
163.5
651
163
678
இவ்வாறு ஒரே கட் ஆஃப் மதிப்பெண்ணில் அதிகமானோர் இருப்பதால் சாய்ஸ் ஃபில்லிங் செய்யும்போது கவனமாக செயல்பட வேண்டும். குறைவான சாய்ஸ் கொடுக்க வேண்டும். அதிக அளவில் சாய்ஸ் கொடுங்கள். கவுன்சலிங் ஆனது முன்னர் போல் நேரடியாக இல்லாமல், ஆன்லைனில் நடைபெறுவதால் உங்கள் கட் ஆஃப் மற்றும் அதற்கு மேல் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை தெரிந்து அதிகமான சாய்ஸ்களை கொடுங்கள். இல்லை என்றால் உங்களுக்கு இடம் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே கவனமுடன் செயல்படுங்கள்.