தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், மெரிட் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் புதிதாக இணைந்த கல்லூரிகள் குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெறும். அதேநேரம் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவிலும் சேர்க்கை பெறலாம்.
இந்த நிலையில், புதிதாக மெரிட் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர்ந்துள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
தனியார் கல்லூரிகள் மேனேஜ்மெண்ட் கோட்டாவை நிரப்ப, பல்வேறு அளவுகோல்கள் வைத்திருந்தாலும், சில டாப் தனியார் கல்லூரிகள் மெரிட் அடிப்படையில் சேர்க்கை வழங்குகின்றன. இதன்படி, 12 ஆம் வகுப்பு மதிப்பெண், நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்த மெரிட் கோட்டாவில் புதிதாக சில டாப் கல்லூரிகள் இணைந்துள்ளன. அவற்றில் ஒன்று சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆப் இன்ஜினியரிங். இந்தக் கல்லூரியில் தமிழ்நாடு தேர்வு வாரிய மாணவர்கள் 195க்கு மேல் கட் ஆஃப் எடுத்திருந்தால் 100% கல்வி கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது. 190க்கு மேல் கட் ஆஃப் எடுத்திருந்தால் 50% கல்வி கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது. 160க்கு மேல் எடுத்திருந்தால், சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் கல்வி கட்டண தள்ளுபடியுடன் சேர்க்கை வழங்கப்படுகிறது.
சி.பி.எஸ்.இ உள்ளிட்ட பிற தேர்வு வாரிய மாணவர்கள் 185க்கு மேல் கட் ஆஃப் எடுத்திருந்தால் 100% கல்வி கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது. 180க்கு மேல் கட் ஆஃப் எடுத்திருந்தால் 50% கல்வி கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அடுத்து கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் மெரிட் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர்க்கை வழங்கப்படுகிறது.
அடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள சவீதா இன்ஜினியரிங் காலேஜில் மெரிட் மேனேஜ்மெண்ட் கோட்டா மூலம் சேர்க்கை பெறலாம். இங்கு நுழைவு தேர்வு நடத்தப்படும்.
அடுத்து கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் மெரிட் மேனேஜ்மெண்ட் கோட்டா சேர்க்கை வழங்கப்படுகிறது. இங்கும் நுழைவுத் தேர்வு உண்டு.
அடுத்து கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் மெரிட் மேனேஜ்மெண்ட் வழங்குகிறது. இங்கு நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளது.
அடுத்து சென்னையில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மெரிட் மேனேஜ்மெண்ட் கோட்டா நுழைவுத் தேர்வு மூலம் வழங்கப்படுகிறது.
அடுத்து செங்கல்பட்டில் உள்ள எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்கில் மெரிட் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர நுழைவு தேர்வு உண்டு.
அடுத்து வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மாவட்டத்திற்கு ஒரு அரசுப் பள்ளி மாணவர், ஒரு மாணவிக்கு கட்டணம் இல்லாமல் சேர்க்கை வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“