தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA-2024) செயல்முறை மே 6 அன்று தொடங்கியது, சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை செயல்முறைகளை முடித்துள்ளனர்.
இதனையடுத்து ஜூன் 6 ஆம் தேதியன்று ரேண்டம் எண்கள் வழங்கப்பட்டன. சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் பதிவேற்றம் ஜூன் 12 அன்று நிறைவடைந்தது. ஜூன் 13 முதல் ஜூன் 30 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜுலை 10 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தரவரிசைப் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டிஎன்இஏ இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும், அதாவது, tneaonline.org. முகப்புப் பக்கத்தில் தரவரிசைப் பட்டியலின் இணைப்பைக் காணலாம். அதை அழுத்தி உள்ளே செல்லவும்.
உங்களுடைய தேவையான விவரங்களை அதில் கேட்ட படி நிரப்பவும்.
உங்கள் டிஎன்இஏ தரவரிசைப் பட்டியல் திரையில் காட்டப்படும். அதை முதலில் நன்றாக சரிபார்க்கவும்
அதை பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக ஒரு நகலை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். இது எதிர்காலத்தில் உதவும்.
அரசு (7.5%) சிறப்பு இடஒதுக்கீடு பிரிவுகள், பொது சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவுகள் மற்றும் பொதுவுக்கான கவுன்சிலிங் ஆன்லைனில் நடத்தப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.