2023-24ம் கல்வியாண்டின் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
இந்த தரவரிசையில் மாணவர்களின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் விலக்களித்து, மாணவர் சேர்க்கையில் திருத்தும் செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வழங்கப்பட்டு, அதன்பின் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் ஒரே கட்ஆப் மதிப்பெண்கள் பெற்றிருக்கும் மாணவர்களில், அவர்கள் பெற்ற மதிப்பெண், பிறந்ததேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், ஒரே கட்ஆப் மதிப்பெண் வரும்வேளையில், 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்படுவது வழக்கமாக இருந்தது.
ஆனால், இந்தாண்டு ரேண்டம் எண்கள் வரிசையில் 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 10-ம் வகுப்பு தேர்வு ரத்தானதால் 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்படாது எனத் தெரிவித்துள்ளது.
வருகின்ற ஜூலை 7-ந்தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது, அதற்கு முன் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil