டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு தமிழக மின் வாரியத்தில் வேலை: எத்தனை காலியிடம்? எவ்வளவு சம்பளம்?
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 500 பணியிடங்கள்; டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2/6
காலியிடங்களின் எண்ணிக்கை
டிப்ளமோ டெக்னீசியன் பயிற்சி: 500
எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 395
எலக்ட்ரிக்கல் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் - 22
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேசன் இன்ஜினியரிங் - 9
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ இன்பர்மேசன் டெக்னாலஜி - 9
சிவில் இன்ஜினியரிங் - 15
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - 50
3/6
கல்வித் தகுதி
2020, 2021, 2022, 2023 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma in Engineering/Technology படித்திருக்க வேண்டும்.
Advertisment
4/6
ஊக்கத்தொகை
இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 8,000 வழங்கப்படும்
5/6
தேர்வு செய்யப்படும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
6/6
விண்ணப்பிக்கும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளத்தில் தேடுதல் பக்கத்தில் TANGEDCO எனத் தேடி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2024