/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1326.jpg)
TNFUSRC Recruitment 2019 Direct Recruitment for Forest Watcher post - காடுகளை ஆள செல்வோமா? வனக்காவலர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்! முழு விவரம் இதோ
TN Forest Watcher Recruitment 2019: தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் சார்பில் வனக்காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 20/7/2019 - 10/8/2019 வர இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதர வழிகளில் விண்ணப்பித்தால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
வனக்காவலர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
TNFUSRC-ன் அதிகாரப்பூர்வ தளமான https://www.forests.tn.gov.in/ செல்லவும்.
அதில், விண்ணப்பதாரர்கள் "புதியதாக பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்" என்ற பொத்தானை அழுத்தி இணையதளம் வாயிலான படிவத்தில் கோரப்பட்டுள்ள அடிப்படை விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
அதன்பிறகு கணினியால் தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை உருவாக்கி, கண்டிப்பாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவை மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
புகைப்படம், கையொப்பம், கையினால் எழுதப்பட்ட உறுதிமொழி, சாதிச்சான்று, விளையாட்டுச் சான்று (தேவைப்படின்) போன்றவற்றை வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளின் படி ஸ்கேன் செய்த ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் விபரங்களை சமர்ப்பிக்கும் முன்பு "சேமிக்க மற்றும் அடுத்து" என்று குறிப்பிட்டுள்ள வசதியினை உபயோகித்து சரிபார்த்துக் கொள்ளவும். நீங்கள் "இறுதி சமர்ப்பி" பொத்தானை அழுத்திய பிறகு சேமித்த விபரங்களை மாற்ற இயலாது.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் / உரிய சேவைக் கட்டணம் ஆகியவற்றை இணையதளம் மற்றும் இணையவழி அல்லாத முறையில் செலுத்தலாம்.
இறுதியில், விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.