தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 – 58,100
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின்படி பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினருக்கு 37 வயது வரையிலும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/231/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.
முகவரி: ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, எண். 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600034
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.05.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.