Advertisment

சென்னை கபாலீசுவரர் கோயில் வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்: உடனே விண்ணப்பிங்க!

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் 7 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn-hrce-jobs

இந்துசமய அறநிலையத்துறை வேலை வாய்ப்பு

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், பிளம்பர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Advertisment

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: தமிழக போக்குவரத்து துறை வேலை; 807 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

இளநிலை உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

தமிழ் புலவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தமிழில் B.Lit அல்லது B.A அல்லது M.Lit அல்லது M.A பட்டம் பெற்றிருக்க வேண்டும். திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

தவில்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளி அல்லது நிறுவனங்களில் இருந்து தவில் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

பிளம்பர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குழாய் தொழில்/ குழாய் பணியர் கம்பியாளர் (Plumber) பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 18,000 – 56,900

வேதபாராயணம்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகமப் பள்ளி அல்லது வேதபாட சாலையில் இருந்து அதன் தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

உதவி பரிச்சாரகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கோயிலின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை – 4.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment