scorecardresearch

தமிழக போக்குவரத்து துறை வேலை; 807 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு; 8ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழக போக்குவரத்து துறை வேலை; 807 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு (படம்: TNSTC இணையதளம்)

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 807 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்து போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 807 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு மின்சார வாரிய வேலை வாய்ப்பு என வரும் செய்தி போலியானது; டான்ஜெட்கோ விளக்கம்

ஓட்டுனர் மற்றும் நடத்துனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 807

கல்வித் தகுதி : டிரைவர் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

கண்டக்டர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு 24 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 17,700 – 56,200

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnstc recruitment 807 vacancies for driver and conductor jobs apply soon

Best of Express