Advertisment

அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; சென்னை சித்தி புத்தி விநாயகர் கோயிலில் 9 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
இந்துசமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை ராயப்பேட்டை அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கணினி இயக்குபவர், அர்ச்சகர் மற்றும் மின் பணியாளர் உள்ளிட்டப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Advertisment

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: ரயில்வேயில் சூப்பரான வேலை வாய்ப்பு; 3,115 பணியிடங்கள்; 10, ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

கணினி இயக்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,300 – 48,700

மின் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : எலக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,600 – 39,900

அர்ச்சகர் நிலை -2

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேத பாடசாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,200 – 41,800

ஓதுவார்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் தேவாரப் பாடசாலையில் தொடர்புடைய துறையில் மூன்றாண்டு படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,600 – 39,900

சுயம்பாகி

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயிலில் ஆகம விதிப்படி நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில்களில் பூஜை மற்றும் சடங்குகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,200 – 41,800

மேளக்குழு

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது தமிழ்நாடு அரசு நிறுவனம் அல்லது பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இசைப் பள்ளியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,300 – 48,700

பகல் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

இரவு காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

துப்புரவாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/143/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வர் திருக்கோயில், இராயப்பேட்டை, சென்னை – 600 014.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/143/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment