Advertisment

அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; ஈரோடு சோழீஸ்வரர் கோயிலில் 4 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn-hrce-jobs

இந்துசமய அறநிலையத்துறை வேலை வாய்ப்பு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், வைராபாளையம், காவேரிக்கரை அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் சீட்டு விற்பனையாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Advertisment

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: BHEL Jobs; பெல் நிறுவன வேலை வாய்ப்பு; பி.இ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

அர்ச்சகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய அறநிறுவனங்கள் அல்லது ஏனைய நிறுவனங்கள் நடத்துகின்ற ஏதேனும் ஆகமப் பயிற்சி மையத்தில் தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : தொகுப்பூதியம் ரூ. 3,000

சீட்டு விற்பனையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 3,100 – 9,300

இரவுக் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 2,300 – 7,400

திருவலகு

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 2,300 – 7,400

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கோயில் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு கொங்கலம்மன் திருக்கோயில், ஈரோடு - 638001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Erode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment