தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறையில் உதவி ஆசிரியர், சுவடியியல் வல்லுநர், கணினி வல்லுனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தி நூல்கள் பதிப்பித்தல், மூலிகை சுவரோவியங்கள் (ம) சுவடிகள் பாதுகாக்கும் பணிகளுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்கள் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள்
துணை ஆசிரியர் – 1
சுவடியியல் வல்லுநர் – 1
கணினி வல்லுநர் (வடிவமைப்பு) - 2
தொழில் நுட்ப வல்லுநர் (மின்படியாக்கம்) – 1
தொன்மை ஓவியங்கள் ஆய்வு அலுவலர் -1
மரபு ஓவிய புனரமைப்பாளர் – 1
ஆய்வுக் கூட உதவியாளர் – 1
ஆய்வுக் கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் – 1
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், மார்ச் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
முகவரி: தபால் பெட்டி எண்: 3304, நுங்கம்பாக்கம் MDO, ஹபிபுல்லா சாலை, (தி.நகர் வடக்கு தபால் அலுவலகம் மேல்மாடி) நுங்கம்பாக்கம், சென்னை - 34.
இந்த அறிவிப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தினை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“