Advertisment

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு; 9 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
temple jobs

இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறையில் பக்தி நூல்கள் பதிப்பிக்கும் பணிகளுக்கும், மூலிகை சுவரோவியங்கள், ஓலைச்சுவடிகள் பாதுகாக்கும் பணிகளுக்கும் தேவையான துணை ஆசிரியர், சுவடியில் வல்லுநர், கணினி வல்லுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Advertisment

இந்தப் பணிகளுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம்.

துணை ஆசிரியர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: எம்.ஏ தமிழ்/ இதழியல்/ தொல்லியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிப்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்: 45,000

சுவடியியல் வல்லுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டமும், ஓலைச்சுவடி பட்டயச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். நூலகப் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 40,000

கணினி வல்லுநர் (வடிவமைப்பு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு/ ஓர் ஆண்டு சுவடியியல் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். DTP, Indesign, Photoshop தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 30,000

தொழில் நுட்ப வல்லுநர் (மின்படியாக்கம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: கணினி பாடப்பிரிவில் இளம் அறிவியல் பட்டம்/ ஊடகம் மற்றும் காட்சி தொடர்பியல், ஓர் ஆண்டு சுவடியியல் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும். மின்படியாக்கத்தில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 25,000

தொன்மை ஓவியங்கள் ஆய்வு அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தொல்லியல் / மரபு ஓவியங்களில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பதிப்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 40,000

மரபு ஓவிய புனரமைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: முதுகலை நுண்கலை பட்டப்படிப்பு. காட்சியக படிப்பு/ புனரமைப்பு மற்றும் ஓவியங்கள் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 35,000

ஆய்வுக் கூட உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 20,000

ஆய்வுக் கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 15,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், தங்கள் சுயவிவரக்குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் மார்ச் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

முகவரி: தபால் பெட்டி எண்: 3304, தபால் அலுவலர், நுங்கம்பாக்கம் MDO, ஹபிபுல்லா சாலை, (தி.நகர் வடக்கு தபால் அலுவலகம் மேல்மாடி) நுங்கம்பாக்கம், சென்னை - 34.

இந்த அறிவிப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/182/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment