Advertisment

அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; காரைக்குடி அம்மன் கோயிலில் 4 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
temple jobs

இந்து சமய அறநிலையத்துறை வேலை

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், அருள்மிகு கொப்புடைய நாயகி அம்மன் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Advertisment

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.07.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: கூடன்குளம் அணுமின் நிலைய வேலை வாய்ப்பு; 183 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ தகுதி; உடனே விண்ணப்பிங்க!

ஓதுவார்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய அறநிறுவனங்கள் அல்லது ஏனைய நிறுவனங்கள் நடத்துகின்ற ஏதேனும் ஆகமப் பயிற்சி மையத்தில் தொடர்புடைய பிரிவில் மூன்று ஆண்டு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,600 – 39,900

சந்தை காவல்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

சுயம்பாகம்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நெய்வேத்தியம், பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

அத்யான பட்டர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய அறநிறுவனங்கள் அல்லது ஏனைய நிறுவனங்கள் நடத்துகின்ற ஏதேனும் ஆகமப் பயிற்சி மையத்தில் தொடர்புடைய பிரிவில் மூன்று ஆண்டு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கோயில் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு கொப்புடைய நாயகி அம்மன் திருக்கோயில், காரைக்குடி நகர் மற்றும் வட்டம், சிவகங்கை - 630001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.07.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment