இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; 17 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; கோவை வனபத்ரகாளியம்மன் கோயிலில் 17 பணியிடங்கள்; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; கோவை வனபத்ரகாளியம்மன் கோயிலில் 17 பணியிடங்கள்; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
temple jobs

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisment

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

சீட்டு விற்பனையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

Advertisment
Advertisements

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,500 – 58,600

காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,900 – 50,400

கூர்க்கா

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,900 – 50,400

ஏவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000 – 31,500

சலவைத் தொழிலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 11,600 – 36,800

திருவலகு

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,900 – 50,400

பெருக்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000 – 31,500

உபகோயில் எழுத்தர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,700 – 50,000

ஓதுவார்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஏதேனும் ஆகமப் பள்ளி அல்லது அரசு சார்ந்த வேத பாட சாலையில் 3 ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,500 – 58,600

உபகோயில் மேளம் குழு

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இசைத்துறையில் நன்கு பயிற்சி பெற்ற சான்றிதழ் அல்லது தமிழ்நாடு அரசு அல்லது மதம் சார்ந்த இசைப் பள்ளி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,700 – 50,000

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க திருக்கோயில் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, நெல்லித்துறை அஞ்சல், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை வட்டம் - 641305

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

kovai Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: