தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையில் திருக்கோயில் புனரமைப்பு, பாதுகாத்தல் பணிக்கான பணித் தொகுதியில் தமிழகம் முழுவதும் மண்டல ஸ்தபதி மற்றும் உதவி ஸ்தபதி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: குறைந்த கல்வித் தகுதி போதும்: சென்னை திருவொற்றியூர் கோயிலில் வேலைவாய்ப்பு
மண்டல ஸ்தபதி
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி : மரபு கட்டிடக் கலைத் தொழில்நுட்பத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டம் (Bachelor of Technical in Traditional Architecture) அல்லது மரபுச் சிற்பக் கலையில் இளநிலை நுண்கலைப் பட்டம் (Bachelor of Fine Arts in Traditional Sculpture) முடித்திருக்க வேண்டும். 10 வருட பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 40 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,000
உதவி ஸ்தபதி
காலியிடங்களின் எண்ணிக்கை : 38
கல்வித் தகுதி : மரபு கட்டிடக் கலைத் தொழில்நுட்பத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டம் (Bachelor of Technical in Traditional Architecture) அல்லது மரபுச் சிற்பக் கலையில் இளநிலை நுண்கலைப் பட்டம் (Bachelor of Fine Arts in Traditional Sculpture) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/153/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி: ஆணையர், இந்துசமய அறநிலையத்துறை, 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600034.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.01.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/153/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.